கழற்றிவிட்ட தனுஷ் ; அப்செட்டில் அமலாபால்…

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள விஐபி2 படத்தின் டீசர் வீடியோ நேற்று வெளியானது.

இந்த வீடியோவை நேற்று நடிகர் அமிதாப்பச்சான் வெளியிட்டார். இந்த டீசரை பார்த்த பலரும், தனுஷிடம், என்ன தலைவா.. கஜோலை கண்ணிலேயே காட்டவில்லையே என கேட்டனர். உண்மையில் இப்படத்தின் கதாநாயகி அமலாபால்தான். ஆனால், அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. மேலும், அந்த டீசர் வீடியோவிலும் அமலாபால் இடம்பெறவில்லை.

எனவே, இந்த விவகாரம் அமலாபாலை அப்செட் ஆக்கியுள்ளதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

வேலை இல்லா பட்டதாரி(விஐபி) முதல் பாகத்திலும் தனுஷிற்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY