கரம் உலகக் கிண்ணம் :தென்கொரியா புறப்பட்டது இலங்கை அணி

தென் கொரி­யாவில் நாளையும் நாளை­ ம­று­தி­னமும் நடைபெறவுள்ள கரம் உலகக் கிண்ண போட்­டி­களில் சம்­பியன் பட்­டத்தை வென்றெடுக்கும் குறிக்­கோ­ளுடன் இலங்கை அணியினர் புறப்­பட்டுச் சென்­றனர்

சுவிஸ் லீக் கரம் போட்­டி­களில் இரண்டு தட­வைகள் (மாலை­தீ­வுகள் 2014, ஐக்­கிய இராச்­சியம் 2016) சம்­பியன் பட்­டத்தை சுவீ­க­ரித்த சமில் குறே (சம்பத் வங்கி) தலை­மை­யி­லான ஆடவர் அணியில் 2012இல் உலக சம்­பி­ய­னான நிஷான்த பெர்­னாண்டோ (கடற்­படை), றோயல் கல்­லூ­ரியின் ஷஹீத் ஹில்மி, சந்­திம பெரேரா (விமா­னப்­படை) ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

யசிக்கா (விமா­னப்­படை) தலை­மை­யி­லான மகளிர் அணியில் ஜோசப் ரொஷிட்டா (கடற்­படை), சலனி லக்­மாலி லிய­னகே (கடற்­படை), மதுக்கா டில்­ஷானி (இராணும்) ஆகியோர் இடம்­பெ­று­கின்­றனர்.

இலங்கை அணி­யினர் நாட்டிலி ருந்து புறப்­ப­டு­வ­தற்கு முன்னர் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் பைஸர் முஸ்­தபா, மேல் மாகாண முத­ல­மைச்சர் இசுரு தேவபிரிய ஆகியோரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்து விடைபெற்று சென்றனர்.