கமல்-ரஜினி நாயகியுடன் 30 வருடங்களுக்கு பிறகு இணையும் பார்த்திபன்

நினைத்தாலே இனிக்கும் படத்தில் கமல்-ரஜினியுடன் நடித்தவர் ஜெயப்ரதா.

மேலும் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் கேணி என்ற தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இதில் முக்கிய வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார்.
மலையாள இயக்குனர் எம்.ஏ.நிஷாத் இயக்கும் இப்படத்தில் நாசர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லை பெரியாறு பிரச்சனையை மையப்படுத்தி இதன் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயப்ரதாவுடன் நடிப்பது குறித்து பார்த்திபன் கூறியதாவது… ‘எனது குருநாதர் கே.பாக்யராஜ், ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் இந்தி ரீமேக் படம் ‘ஆக்ரி ரஸ்தா’ படத்தில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.

அந்த படத்தில் ஜெயப்ரதா அவர்கள் அமிதாப் மற்றும் ஸ்ரீதேவியுடன் நடித்திருந்தார்.

அதன்பின்னர் இப்போது மீண்டும் ஜெயப்ரதாவுடன் இணைவது எனக்கு மகிழ்ச்சி என்றார்.

LEAVE A REPLY