கமல்ஹாசனுக்கு அறங்காவலர் பதவி… விஷால்

25-1445760679-vishal346நடிகர் சங்கத்தில் கவுரவப் பதவியை ஏற்க சம்மதம் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கூறியுள்ளார்.

இன்று சென்னையில் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் சந்தித்தனர். அப்பொழுது தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் உறுதி அளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், நடிகர் சங்கத்தின் கவுரவ பதவிக்கு நடிகர் கமல் சம்மதம் தெரிவித்துள்ளார். சங்கத்தின் டிரஸ்டிகளில் ஒருவராக இருக்க கமல் சம்மதம் தெரிவித்ததாகவும் விஷால் தெரிவித்தார். கூட்டத்தின் முடிவில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்றும், அதன் பிறகு தீர்மான விவரங்களை நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் வடபழனி ‘கிரீன் பார்க்’ ஹோட்டலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து வெளியிடுவார்கள். இதனால் வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி செய்தியாளர்களும் குவிந்துள்ளனர்.

LEAVE A REPLY