கமலுக்கு பிடிக்காத அந்த 3 விஷயங்கள் என்ன தெரியுமா.?

உலகநாயகன் கமல், முதன்முறையாக பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.

தற்போது இதற்கான போட்டோ சூட் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி பிஆர்ஓ ஆன நிகில் முருகன் அவர்கள் கமலுடன் பணியாற்றிய அனுபவங்களை தன் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது…

கமல் அவர்களுக்கு மூன்று விஷயங்கள் பிடிக்காது. அவை

என்னால் முடியாது
இது ரொம்ப கஷ்டம்
இதற்கு ரொம்ப செலவு ஆகும் என்பவைதான்.

அவரிடம் இதை யாரும் சொல்லக்கூடாது.

நாம் முயன்று செய்யமுடியாமல் தோற்றால் சரி. ஆனால் எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு இப்படி கூறினால் அவருக்கு பிடிக்காது என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY