கப்பல்களை தகர்க்கும் ஏவுகணை அமைப்பை நிறுவி சோதனை செய்த ரஷ்யா!

கடலில் எதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் ஏவுகணை அமைப்பை நிறுவிய ரஷ்யா, அதற்கான சோதனையும் நடத்தியுள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலின் Kotelny தீவில் உள்ள லோப்டெவ் கடற்கரையில் பாஸ்டியன் கடற்கரையோர பாதுகாப்பு அமைப்பு என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை அமைப்பை ரஷ்யா நிறுவியுள்ளது.

Kh-35U என்ற இந்த ஏவுகணையின் வேகம் மணிக்கு சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் எனவும் இந்த ஏவுகணை அமைப்பை சோதனை செய்த காட்சிகளை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.