கனடா வெளிவிவகார அமைச்சர், வட மாகாண முதலமைச்சர் சந்திப்பு

download-1-25-450x281கனடா வெளிவிவகார அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டிபன் டியோன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கனடா வெளிவிவகார அமைச்சருக்கும் வட மாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கனடா வெளிவிவகார அமைச்சர் ஸ்டிபன் டியோன் உள்ளிட்ட பிரதிநிதிகள் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்தச் சந்திப்பின் பின்னர், யாழ் பொது நூலகத்திற்கும் கனடா வெளிவிவகார அமைச்சர் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்த கனடா வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்.

அத்துடன், ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோகணேசனையும் கனடா வெளிவிவகார அமைச்சர் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY