கனடா பிரதமர் அமெரிக்கா அதிபரை இதற்காகதான் பாரட்டியுள்ளாரா?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பை, கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ பாராட்டியுள்ளார்.

அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், கனடா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ கலந்து கொண்டுள்ளார். இந்நிகழ்வில் கனடா பிரதமர் அமெரிக்கா அதிபர் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

அவர் முன்வைத்துள்ளதாவது, “டிரம்ப் எதையும் ஒளிவு மறைவின்றி நேருக்கு நேராக பேசக்கூடியவர். அதற்கு எடுத்துக்காட்டாக கனடாவிடம் அமெரிக்கா சமீபத்தில் முன்வைத்த ஸ்டீல் கட்டணத்தை குறிப்பிடலாம். மேலும் அமெரிக்கா அதிபர் என்னுடன் சிறந்த தொடர்பில் உள்ளார். அமெரிக்காவும் கனடாவும் சிறந்த நட்பு நாடுகள்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY