கத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும் !

150224131935_qatar_world_cup_512x288_gettyகத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும்.

உலகக் கால்பந்து சங்கமான, ஃபிஃபாவினால் கோரப்படும் சுமார் 60,000 அறைகளை கத்தாரால் தரமுடியாத அளவுக்கு, தற்போதைய கட்டுமான வேலைகளின் முன்னேற்றம் காணப்படும் நிலையில், இந்த யோசனையை , போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள்.

இந்தக் கூடாரங்களை அமைக்கும் யோசனை, ஃபிஃபாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு ஆக்கபூர்வமான, மற்றும் கலாசார ரீதியில் உண்மையான வழி என்று கத்தாரின் உலகக்கோப்பை அதியுயர் குழுவுக்காகப் பேசவல்ல ஒருவர் கூறினார்.

தட்டுப்பாடற்ற மின்சாரம் மற்றும் உணவு விநியோகம் ஆகியவைகளுடன் கூடிய பாலைவன முகாம்கள் கத்தாரில் செல்வந்தர்களால் குளிர்காலங்களில் பொதுவாகப் போடப்படுகின்றன.

இந்த விளையாட்டுப்போட்டிகளுக்குத் தேவைப்படும் இருப்பிட வசதியை வழங்க சொகுசுக் கப்பல்களையும் பயன்படுத்த கத்தார் திட்டமிடுகிறது.

LEAVE A REPLY