கதாநாயகி குழப்பம்

நடிகர் விக்ரம் உடைய மகன் துருவ், அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். பாலா இயக்கத்தில் உருவாவிருக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரேயா சர்மாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக சென்னைக்கு வரவைழைக்கப்பட்டு ஸ்ரேயா சர்மாவை வைத்து டெஸ்ட் ஷுட் எடுத்திருக்கிறார் பாலா.

சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஸ்ரேயா சர்மா. அதன் பிறகு எந்திரன் உட்பட ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா சர்மா, பெரிய மனுஷியான பிறகு தெலுங்கில் சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரபல ஜவுளிக்கடையின் விளம்பரத்தில் நடித்த ஸ்ரேயா சர்மாவைப் பார்த்த பாலா, அர்ஜுன் ரெட்டி தமிர் ரீமேக்கில் துருவ் ஜோடியாக அவரை நடிக்க வைக்க முடிவு செய்து டெஸ்ட் ஷூட் பண்ணியுள்ளார். இதற்கிடையில் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராவை கமிட் பண்ணலாமா என்ற யோசனையிலும் பாலா இருக்கிறாராம். இதனால் ஹீரோயின் விஷயத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.

LEAVE A REPLY