கதர் ஆடைகளை அதிகளவில் பயன்படுத்த ஜெயலலிதா வேண்டுகோள்!

asdfகைவினைப் பொருட்களையும், கதர் ஆடைகளையும் மாணவ மாணவியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட அனைவரும் அதிகளவில் வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்கால நாகரிகத்திற்கு ஏற்றவாறு புதிய வடிவமைப்புகளில் அழகிய வண்ணங்களில் மிக நேர்த்தியான முறையில் நெசவு செய்யப்படும் கதர் ஆடைகளும், புதிய யுத்திகளுடன் தயாரிக்கப்படும் கைவினைப் பொருட்களும் அனைத்து கதர் நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு அனைத்து ரக கதர் ரகங்களுக்கும் ஆண்டு முழுவதும் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கி வருவதாகவும் அவர் கூறினார். ஏழை கைவினைக் கலைஞர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு உதவ அனைவரும் கதர் பொருட்களை பயன்படுத்தவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY