கண்டி கலவரங்களுக்கு காரணமான இரு எம்.பிக்களை கட்சியை விட்டு நீக்குகிறது சுதந்திரக் கட்சி!

கண்டியில் இடம்பெற்ற இனவன்முறைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரை, அக்கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களே கண்டியில் இடம்பெற்ற கலவரங்களுக்கு காரணம் என, கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்கள் மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY