கண்டியில் பிரதமர் மஹிந்த விடுத்துள்ள சூளுரை!

நாட்டில் ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்கியதும் நாட்டின் கல்விக் கட்டமைப்பில் துரிதமான மாற்றம் ஏற்படுத்தப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

கண்டி கடுகஸ்தொட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அதேபோல அனைத்து மாவடங்களுக்கும் மும்மொழிப் பாடசாலையொன்றை வழங்கவும் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

இந்த நாட்டின் பிள்ளைகளுக்கு வெற்றிகரமான கல்வியை பெற்றுக் கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாகும். நாடாளுமன்றில் மிகக் குறைந்த ஆசனங்களே உள்ளது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். பெரும்பாலானோர் எதிர்க்கட்சியிலேயே உள்ளனர்.

அதன்காரணத்தால் அதனையும் நாம் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு எமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்தோடு அடுத்த சந்தர்ப்பத்தில் வேகமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் எனும் ரீதியில் தயாராகி வருவதையும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.