கட்டுநாயக்க செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் பகுதி இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பினை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று மதியம் 12 மணி முதல் பயணி ஒருவர், இருவரை பார்வையாளர் மண்டபத்திற்கு அழைத்து வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர் மண்டபத்தை மூட சிவில் விமான சேவை அதிகார சபை தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.