கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 2.30 க்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இதேவேளை கொவிட் 19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொது தேர்தலை நடத்துவதற்கான ஏது நிலைமைகள் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதநிதிகள் அண்மையில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இருந்தனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

சிறு கட்சிகளின் பிரதநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் வழங்கப்படும்.

கடந்த வாரத்தில் விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட இருந்த நிலையில் நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு அவற்றை வழங்காதிருக்க தேர்தல்கள் ஆஐணக்குழு தீர்மானித்திருந்தது.

இவ்வாறு விருப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டவுடன் தேர்தல் பிரச்சார பணிகள் ஆரம்பிக்கும் என்பது குறிப்பிடதக்கது.