கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி!

கடந்த ஒக்டோபர் மாதம் 51 நாள் ஆட்சி கவிழ்ப்பு இடம்பெற்றவேளை கட்சி தாவலில் ஈடுபட்ட வசந்த சேனநாயக்கவுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சர்கள் இருவரும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (புதன்கிழமை) பதவியேற்றனர்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ரஞ்சித் மத்தும பண்டார, பொது நிர்வாகம், இடர் முகாமைத்துவம் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சராகவும் பி.ஹரிசன் விவசாய, கால்நடைகள் வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்றனர்.

அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க, வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சராகவும் பதவியேற்றார்.