கட்சி தலைவர் பதவியில் இருந்து ரணில் இராஜினாமா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது பதவி இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமைப் பதவிக்காக தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி வரலாறு காணாத தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் மேலும் தெரிவித்தார்.