கட்சியின் பெயர் மாற்றத்திற்கான வாக்கெடுப்பு – மரீன் லூ பென்

பிரான்ஸ் நாட்டின் தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன் லூ பென் அக்கட்சியின் பெயர் மாற்றம் குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தோல்வியையடுத்து, தேசிய முன்னணி கட்சியின் தலைவர் மரீன்-லூ-பென் அவரது கட்சியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அண்மையில் கட்சியின் உறுப்பினர்களோடு மரீன் லூ பென், நடத்திய வருடாந்த சந்திப்பின்போது கட்சியின் பெயரை விரைவில் மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மரீன்-லூ-பென், தேசிய முன்னணி (National Front party) எனும் தமது கட்சி பெயருக்கு பதிலாக தேசிய பேரணி (National Rally) எனும் பெயரை பரிந்துரைத்துள்ளார்.

இது குறித்து மரீன் லூ பென் தெரிவிக்கும் போது, இந்த பெயர் என்னுடைய பரிந்துரை மட்டும் தான். ஆனால் அதை உறுப்பினர்கள் தான் இதனை முடிவு செய்யவேண்டும். ஆகவே இந்த பெயருக்கான ஆதரவு வேண்டி வாக்கெடுப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெயர் மாற்றத்துடன் மட்டுமல்லாமல் மேலும் பல கொள்கை மாற்றங்களும் கட்சி தரப்பில் செய்யப்பட உள்ளதாக மரீன் லூ பென் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY