கட்சித்தலைவர்களை அவசரமாக சந்திக்கின்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் கட்சித்தலைவர்களுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

பிரதமரின் அழைப்பின் பேரில் எதிர்வரும் வாரம் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவது தொடர்பாகவும், எந்த முறைமையின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.

எதிர்வரும் ஜுன் மாதத்திற்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடாத்துவது தொடர்பாக ஆராயப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படும் பட்சத்தில் விரைவில் அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.