கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொண்டாடப்பட்ட கற்றலோனியா தேசிய தினம்!

கற்றலோனியா தலைநகர் பாசேலோனாவில் இன்று கொண்டாடப்பட்ட தேசிய தின நிகழ்வில் 600 க்கும் மேற்பட்ட மேலதிக பாதுகாப்பு முகவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர, பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் இன்றைய (செவ்வாய்க்கிழமை) நிகழ்வுகளில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயின் பிராந்தியத்தின் முதல் ஞாபகார்த்த நாளை, அதன் தலைவர் கடந்த வருடம் சுதந்திர தினமாக அறிவித்து பின்னர் நாட்டை அரசியலமைப்பு நெருக்கடிக்குள் சிக்கவைத்தார்.

ஸ்பெயினின் மற்ற பகுதிகளை விட செழிப்பான வடகிழக்கு பிராந்தியத்தை பிளவுபடுத்திய ஆதரவாளர்கள், கடந்த ஆண்டுகளில், செப்டம்பர் 11 ஆம் திகதியை “டயடா”, ஆண்டு நிறைவாக கொண்டாடுகின்றனர். பிளவுபடுத்தப்பட்ட கற்றலோனியாவின் பிரிவுகள் மிகக் பலம்வாய்ந்த பகுதிகளாக கருதப்படுகின்றன.

இது ஸ்பெயினின் பொருளாதார உற்பத்தியில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளதுடன் கல்வி, சுகாதாரம், மற்றும் அதன் சொந்த பொலிஸ் படை என்பவற்றையும் கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் பிராந்திய பிரதிநிதி, தமது பகுதிக்கு வலுவூட்டப்பட்ட 600 முகவர்களை அனுப்புமாறு கோரியிருந்தார். இது திட்டமிடப்பட்ட பேரணிகளுக்கு சாதாரண அணுகுமுறைதான் என்று அவர் குறிப்பிட்டார்.