கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­க­வுள்ள செய்ட் அல் ஹுசைன்

ஜெனி­வாவில் ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை குறித்த இரண்டு விவா­தங்கள் நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்த விவா­தங்­க­ளின்­போது ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைன் இலங்கை மீது கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

குறிப்­பாக இலங்­கை­யா­னது 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்டு பின்னர் 2017 ஆம் ஆண்டு நீடிக்­கப்­பட்ட இலங்கை குறித்த பிரே­ர­ணையை இலங்கை இது­வரை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வில்லை என்ற விட­யத்தை செய்ட் அல் ஹுசேன் எடுத்­து­ரைப்பார் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது.

ஏற்­க­னவே அரசு சார்­பாற்ற அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களை கடந்த வெ ள்ளிக்­கி­ழமை சந்­தித்து கலந்­து­ரை­யா­டிய அல் ஹுசேன் இலங்கை விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­களின் பக்­கமே நாம் நிற்­கின்றோம். இயன்­ற­வரை நீதியை பெற்றுக் கொடுக்க முயற்சி எடுப்போம் என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

அதன்­படி பாதிக்­கப்­பட்ட மக்­களின் சார்பில் நிற்போம் என்று செய்ட் அல் ஹுசேன் தெரி­வித்­துள்ள நிலையில் அவர் இலங்கை குறித்து நடை­பெறும் இரண்டு விவா­தங்­க­ளிலும் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கிப்பார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை சர்­வ­தேச நாடு­களும் இலங்கை விவ­கா­ரத்தில் கடும் அழுத்­தங்­களை பிர­யோ­கித்­து­வ­ரு­கின்­றன. தற்­போது ஜெனி­வாவில் நடை­பெற்­று­வரும் அமர்வு ஒன்றில் உரை­யாற்­றிய கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களின் பிர­தி­நி­திகள் இலங்­கையின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்டில் காணப்­ப­டு­கின்ற தாமதம் கார­ண­மாக அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ள­தாக தெரி­வித்­தி­ருந்­தன.

அத்­துடன் இலங்கை அர­சாங்கம் பொது­ந­ல­வாய மற்றும் சர்­வ­தேச விசா­ர­ணை­யா­ளர்கள் நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்­கான அர்ப்­ப­ணிப்பை வெ ளிக்­காட்ட வேண்டும் என்று கனடா வலி­யு­றுத்­தி­யுள்ள நிலையில் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையை அமுல்­ப­டுத்­து­வதில் முன்­னேற்­றத்தை வெ ளிக்­காட்­டு­மாறு அர­சாங்­கத்தை வலி­யு­றுத்­து­வ­தாக பிரிட்டன் அறி­வித்­தி­ருக்­கி­றது.

இதே­வேளை இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் 14 உபக்­கு­ழுக்­கூட்­டங்கள் ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளன. இந்த கூட்­டங்­களில் இலங்கை பிர­தி­நி­திகள் பாதிக்­கப்­பட்­டோரின் பிர­தி­நி­திகள் சர்­வ­தேச நாடு­களின் தூது­வர்கள் என பல்­வேறு தரப்­பி­னரும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

இன்று 12ஆம் திகதி பாரதி கலா­சார அமைப்­பினால் இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மனித உரி­மை­பே­ரவை வளா­கத்தின் 23 ஆம் இலக்க அறையில் இந்த உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அதே­போன்று 13 ஆம்­தி­கதி தமிழ் உலகம் என்ற அமைப்­பினால் இலங்கை தொடர்பில் ஒரு உபக்­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 7 ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த உபக்­கு­ழுக்­கூட்­டத்தில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளனர்.

மேலும் 14 ஆம்­தி­கதி புத்­து­ரு­வாக்க சமூக திட்ட முன்­னணி என்ற அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான விசேட உப­கு­ழுக்­கூட்டம் 21ஆம் இலக்க அறையில் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. 15 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் ஒரு சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பினால் இலங்கை விவ­காரம் தொடர்பில் விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

குறிப்­பாக இலங்­கையில் தன்­னிச்­சை­யாக தடுத்­து­வைத்தல் விவ­காரம் தொடர்­பி­லேயே இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இதில் பல்­வேறு தரப்­பினர் கலந்து கொண்டு இலங்கை விவ­காரம் தொடர்பில் உரை­யாற்­ற­வுள்­ளனர். 21 ஆம் இலக்க அறையில் இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அத்­துடன் எதிர்­வரும் 16ஆம் திகதி இலங்கை மனித உரிமை விவ­காரம் தொடர்பில் பசுமைத் தாயகம் அமைப்­பினால் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­தக்­கூட்­டமும் 21ஆம் இலக்க அறை­யி­லேயே நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

மேலும் மற்­று­மொரு சர்­வ­தேச அமைப்­பினால் எதிர்­வரும் 19 ஆம்­தி­கதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளா­கத்தில் 24ஆம் இலக்க அறையில் ஒரு உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. இந்­தக்­கூட்­ட­மா­னது இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐ.நா. வின் மீளாய்வு என்ற தலைப்பில் நடை­பெ­ற­வுள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க பசுமை தாயகம் அமைப்­பினால் மற்­று­மொரு இலங்கை தொடர்­பான உபக்­கு­ழுக்­கூட்டம் 20 ஆம்­தி­கதி 25 ஆம் இலக்க அறையில் நடை­பெ­ற­வுள்­ளது. இலங்­கையின் நிலை­மா­று­கால நீதி தொடர்­பாக இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அதே தினத்­தன்று சர்­வ­தேச பௌத்த நிவா­ரண அமைப்­பினால் இலங்கை தொடர்­பான ஒரு விசேட உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

27ஆம் இலக்க அறையில் இந்த உப­கு­ழுக்­கூட்டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. அந்­த­வ­கையில் இந்த அனைத்து உபக்­கு­ழுக்­கூட்­டங்­க­ளிலும் இலங்கை தொடர்பான விடயங்கள் ஆராயப்படவுள்ளன. விசேடமாக இலங்கை மனித உரிமை நிலைமைகள் மற்றும் ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இந்த உபகுழுக்கூட்டங்களில் ஆராயப்படவுள்ளன.

அதன்படி ஜெனிவா செல்லவுள்ள இலங்கை அரசாங்கத்தின் தூதுக்குழுவினர் ஜெனிவா அமர்வுகளில் உரையாற்றவுள்ளதுடன் உபகுழுக் கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். இதில் சில கூட்டங்களில் செய்ட் அல் ஹுசேனும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY