கடற்படைத் தளபதி பியால் டி சில்வா அட்மிரலாக தரம் உயர்வு

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா இன்று (14) முதல் அட்மிரலாக ஜனாதிபதியினால் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடற்படையின் 23 வது தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஓய்வு பெறுவதற்கு முன்பு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றில் நேற்று ஈடுபட்டார்.

இந்த சந்திப்பில் பிரதமர் கடற்படைத் தளபதியிடம் வளமான எதிர்காலத்திற்கான வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா ஜூலை 15 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதியும் பிரதமரும் இடையே நினைவு பரிசு பரிமாற்றம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.