கடந்த வருடத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு 5614 முறைப்பாடுகள்

கடந்த 2017 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குக் கிடைக்கப்பெற்ற 5,614 முறைப்பாடுகளுள் ஆகக்கூடிய முறைப்பாடுகள் தடுப்புக் காவலில் இருக்கும்போது முன்னெடுக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலானவை என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீப்பிக்கா உடகம தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இவ்வாறான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1,174 ஆகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி 249 முறைப்பாடுகள் சித்திரவதைகளை அடிப்படையாகக் கொண்டது (பிரதானமாக பொலிஸ்), 171 முறைப்பாடுகள் துன்புறுத்தல்கள் (வடக்கில் புலனாய்வு அதிகாரிகள் சிவிலியன்களை துன்புறுத்தல்), 323 முறைப்பாடுகள் அச்சுறுத்தல்கள்( குறிப்பாக பொலிஸிடமிருந்து),298 முறைப்பாடுகள் பலவந்தமாக கைது செய்து தடுத்து வைத்தல் ஆகியன தொடர்பானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY