கடந்த அரசாங்கத்தால் பெறப்பட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடன் திருப்பிச் செலுத்தபட்டுள்ளது!

2014 ஜனவரியில் கடந்த அரசாங்கத்தால் பெறப்பட்ட ஒரு பில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர்களை மீளச் செலுத்திவிட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் பொது விநியோக அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “நாம் பயன்படுத்தப்படுவதைப் போல் அல்லாமல், இந்த நிதிகளை விரைவில் திருப்பிச் செலுத்த வேண்டும். அத்தோடு இதுபோன்ற பல கடன்களை நாம் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.” என அவர் கூறினார்.

இதற்கிடையில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவும் இந்த கடனை முற்றிலுமாக மீளச்செலுத்திவிட்டதாக உறுதிப்படுத்தினார். மேலும் பெற்றுக்கொண்ட கடன்களை மீள செலுத்திய பெருமையை தொடர்ந்தும் இலங்கை கொண்டிருப்பதாகவும் கூறினார்.

அத்தோடு நட்பு நாடுகள், சர்வதேச இறையாண்மை நிதிகள் மற்றும் கடன் வழிமுறைகளிலிருந்து காலவரையற்ற கடன்களைக் கொண்டு அதன் வெளிநாட்டு நாணயங்களை நிர்வகிப்பதில் அரசாங்கம் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.