கடத்தப்பட்ட சுவிஸ் ஊழியர் விவகாரத்தில் திடுக்கிடும் புதிய தகவல்

தன்னை கடத்திச் சென்றதாகக் கூறிய சுவிஸ் உயர்ஸ்தானியராலத்தின் இலங்கை ஊழியர் கார்னியர் பானிஸ்டரின் தொலைபேசி உரையாடலுக்கு ஏற்ப இன்னும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் ஊடாக இந்தத் தகவல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடத்திச் செல்லப்பட்ட அந்த உத்தியோகத்தரின் வாயில் கைத்துப்பாக்கி ஒன்று வைக்கப்பட்டு மிரட்டியதன் ஊடாக அச்சமடைந்து, பேசமுடியாமல் இருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரதன தகவலொன்றை வெளியிட்டிருந்தார்.

ஆனால் இந்த காலப்பகுதியில்தான் குறித்த ஊழியர் பலருடனும் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த உரையாடல் தொடர்பான ஆதாரங்களையே நீதிமன்றத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

இதேவேளை, பொலிஸ் குற்றப்புலனாய்வு அதிகாரி நிசாந்த சில்வா சுவிஸுக்கு அடைக்கலம் கோரி சென்றமையும் குறிப்பிடத்தக்கது.