கஜகஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து: கைக்குழந்தை உட்பட 5 பேர் பலி

535d6b6c-22b5-4a1a-b43e-0f000a9eb546_S_secvpf.gifகஜகஸ்தான் நாட்டில் இலகுரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் கைக்குழந்தை உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.

இது குறித்து அந்நாட்டு இணைய ஊடகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, நேற்று மாயமான MD-600N இலகுரக ஹெலிகாப்டரின் பாகங்கள் இன்று அல்மாட்டி நகரின் தென்கிழக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த செய்தியை உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும் டெங்க்ரிநியூச் என்ற அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

பலியான கைக்குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட தருணத்தில்தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கல் எதுவும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY