ஓட்டலில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட போகோ ஹராம் தீவிரவாதிகள் நைஜீரியாவில் கைது

95dbe571-13a5-4c05-8cd8-7e1fcc9f2745_S_secvpf.gifகடந்த 6 வருடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி நைஜீரிய மக்களை கொன்று குவித்த தீவிரவாத இயக்கம் போகோ ஹராம். இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கத்தியர்கள் தங்கியுள்ள ஓட்டலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில் நைஜீரியாவின் புலனாய்வுத் துறை அபுஜா நகரில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதாகக் கூறி 9 போகோ ஹராம் தீவிரவாதிகளைக் கைது செய்துள்ளது. இந்த 9 பேரில் ஒருவன் அபுஜாவில் உள்ள ஓட்டல் ஒன்றை கண்காணித்ததாக மாநில பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY