ஒல்லி இசையமைப்பாளரின் தம்பியைக் காதலிக்கும் நடிகை

மலையாளத்தில் இருந்துவந்து தமிழில் கொடிநாட்டி வரும் நடிகை, ஒல்லி இசையமைப்பாளரின் தம்பியான நடிகரைக் காதலிக்கிறார் என்கிறார்கள்.

ஸ்டைலிஷ் இயக்குநரின் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் இந்த மலையாள நடிகை. வம்பு நடிகருக்கு ஜோடியாக இவர் நடித்த முதல் படமே நல்ல வரவேற்பைப் பெற்றது.

வாரிசு நடிகருடன் அவர் நடித்த படம், கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. ஆனால், அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

அடுத்ததாக, அரசியல் வாரிசு நடிகருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் இந்த நடிகை.

இவர், ஒல்லி இசையமைப்பாளருக்குத் தம்பி முறையாகும் ஒருவரைக் காதலிக்கிறாராம். அவரும் ஒரு நடிகர்தான்.

‘மதுபானம்’ ஒன்றின் பெயரைக் கொண்ட படத்தில் ஹீரோவாக நடித்த இவர், ஒல்லி நடிகருக்குத் தம்பியாக முதல் பாகத்திலும் நடித்துள்ளார். அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாக இருக்கிறது.

அதிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY