ஒரே சமயத்தில் பாரீஸில் 4 மொழிகளில் ‘குயின்’ ரீமேக் படப்பிடிப்பு

பாரீஸில் 4 மொழிகளில் ‘குயின்’ ரீமேக் படப்பிடிப்பும் ஒரே சமயத்தில் நடைபெற்று வருகிறது.

மார்ச் 2014-ல் விகாஸ் பகால் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிப்பில் வெளியான படம் ‘குயின்’. அனுராக் காஷ்யப் மற்றும் விக்கிரமாதித்யா தயாரித்த இப்படத்தினை வயாகாம் நிறுவனம் வெளியிட்டது. விமர்சகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் இப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதன் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பரூல் யாதவ் நடித்து வருகிறார்கள். இதில் தமிழ் மற்றும் கன்ண்ட ரீமேக் இரண்டையும் ரமேஷ் அரவிந்த் இயக்கி வருகிறார்.

‘குயின்’ படத்தின் பிரதான காட்சிகள் வெளிநாட்டில்தான் படமாக்கப்பட்டது. ஒரே தயாரிப்பாளர் 4 மொழி ரீமேக்கையும் தயாரித்து வருவதால், சரியாக திட்டமிட்டு தற்போது பாரீஸில் அனைத்து மொழி ரீமேக்கின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY