ஒருவழியாக ரிலீஸாகிறது தீபிகா படுகோனேவின் ‘பத்மாவதி’

தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்மாவதி’, பலத்த எதிர்ப்புகளுக்குப் பிறகு ரிலீஸாக உள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பத்மாவதி’. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஷாகித் கபூர் ஆகிய மூவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ராணி பத்மினி வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்ரீராஜ்புத் கர்ன சேனை உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் தீபிகா படுகோனே தலையைக் கொண்டு வருபவர்களுக்கு கோடிக்கணக்கில் பரிசுகளும் அறிவிக்கப்பட்டன. தீபிகா தலைக்கு 10 கோடி ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

எனவே, டிசம்பர் மாதம் 1ஆம் தேதி ரிலீஸாக வேண்டிய படம், தள்ளி வைக்கப்பட்டது. தற்போது எல்லாப் பிரச்னைகளும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். எனவே, வருகிற 25ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. அதே தேதியில் அக்‌ஷய் குமாரின் ‘பேட்மேன்’ படமும் ரிலீஸாகிறது.

LEAVE A REPLY