“ஒருங்­கி­ணைந்த கொரியா”

இந்த முறை தென்­கொ­ரியா மற்றும் வட­கொ­ரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் “ஒருங்­கி­ணைந்த கொரியா” என்ற பெயரில் சில குழுப் போட்­டி­களில் பங்­கேற்கவுள்­ளன.

ஏனைய போட்­டி­களில் தனி நாடு­க­ளாக பங்­கேற்­றாலும் நாடுகள் அறி­முக விழாவில் ஒருங்­கி­ணைந்த கொரி­யா­வாக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்­களும் கைகோர்த்து வந்த காட்சி காண்­ப­வர்­களை மெய்சிலிர்க்க வைத்­தது.

இந்­தோ­னே­ஷி­யாவில் நேற்­று­ முன்­தினம் சனிக்கழமை ஆரம்­ப­மான 18 ஆவது ஆசிய விளை­யாட்டுப் போட்­டியின் தொடக்க விழாவில் நம்­பிக்கை விதைக்கும் அணி­யாக கள­மி­றங்­கி­யது யுத்த பூமி­யான சிரிய அணி.

ஆசிய நாடு­களில் இதுவரை இல்­லாத அளவில் தொடக்க விழாவை பிர­மா­த­மாக, பிர­மாண்­ட­மாக நடத்­தி­யது இந்­தோ­னே­ஷியா.

ஆசிய விளை­யாட்டு விழாவில் அணி­களின் அறி­முக விழாவில் பல கூர்ந்து கவ­னிக்­கத்­தக்க விட­யங்கள் அரங்­கே­றின.

அதில் முக்­கி­ய­மா­னது யுத்த பூமி­யான சிரிய அணி விளை­யாட்டு உல­குக்கே நம்­பிக்­கையை விதைக்கும் வண்ணம் தேசி­யக்­கொ­டியை ஏந்திக் கொண்டு முகத்தில் புன்­னகை தவழ கம்­பீ­ர­மாக நடந்து சென்­றது.

அதேபோன்று இந்த முறை தென்­கொ­ரியா மற்றும் வட­கொ­ரியா என்பன ஒரே நாடாக இணைந்து ஆசிய விளை­யாட்டுப் போட்­டி­களில் “ஒருங்­கி­ணைந்த கொரியா” என்ற பெயரில் சில குழுப் போட்­டி­களில் பங்­கேற்கவுள்­ளன.

ஏனைய போட்­டி­களில் தனி நாடு­க­ளாக பங்­கேற்­றாலும் நாடுகள் அறி­முக விழாவில் ஒருங்­கி­ணைந்த கொரி­யா­வாக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்­களும் கைகோர்த்து வந்த காட்சி காண்­ப­வர்­களை மெய்சிலிர்க்க வைத்­தது.