ஒன்றாகப் பயணிக்க வேண்டாம்- மைத்திரி, ரணில், மகிந்தவுக்கு புலனாய்வுப் பிரிவு எச்சரிக்கை

வரும் வாரங்களில், நாட்டின் தலைவர்களை ஒன்றாகப் பயணம் செய்ய வேண்டாம் என்று சிறிலங்காவின் அரச புலனாய்வுச் சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தும் சாத்தியங்கள் இருப்பதாக கிடைத்துள்ள தகவல்களை அடுத்தே, இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்வுகளில் இருந்து குறிப்பாக, தேவாலயங்கள், ஆலயங்கள், ஏனைய மதவழிபாட்டு இடங்களில் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து தலைவர்களை விலகி இருக்குமாறும், அவர்களின் பங்கேற்பது முக்கியம் எனின், உலங்குவானூர்திகளைப் பயன்படுத்துமாறும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.