ஐ.பி.எல். பண பரிமாற்றத்தில் முறைகேடு நடிகர் ஷாருக்கானுக்கு மீண்டும் சம்மன் அமலாக்கத்துறை நடவடிக்கை

201510280216431867_Actor-Shahrukh-Khan-summoned-againEnforcement-action_SECVPF.gifஐ.பி.எல். பண பரிமாற்றத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை மீண்டும் ‘சம்மன்’ அனுப்பியுள்ளது.

ஷாருக்கான்

‘இந்தியன் பிரிமீயர் லீக்’ எனப்படும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் விளையாடி வருகிறது. இதில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணியின் உரிமையாளராக பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை ஜூகி சாவ்லா மற்றும் அவருடைய கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் இருக்கின்றனர்.

ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகள் ஒவ்வொன்றிலும் பல கோடி ரூபாய் புழக்கத்தில் இருப்பதால் மத்திய அமலாக்கத்துறை அந்த அணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கணக்குகளில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதன் பங்குகளை மொரீஷியஸ் நாட்டின் நிறுவனத்துக்கு ஒன்பது மடங்கு வரை குறைத்து விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சம்மன்

ஆகையால், அன்னிய செலாவணி நிர்வாக சட்டத்தின்கீழ் இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நடிகர் ஷாருக்கானுக்கு ஏற்கனவே அமலாக்கத்துறை இயக்குனரகம் இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனாலும், அவர் ஆஜராகி பதிலளிக்கவில்லை. ஆகையால், மூன்றாவது முறையாக மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. இதன்பேரில், ஷாருக்கான் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பார் என்று தெரிகிறது.

இந்த குற்றச்சாட்டுகளின்கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சக உரிமையாளர்கள் ஜூகி சாவ்லா, அவருடைய கணவர் ஜெய் மேத்தா ஆகியோர் கடந்த மே மாதம் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY