ஐ.நா.மனித உரிமை கவுன்சில் தேர்தலில் பாகிஸ்தான் தோல்வி

indexஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் நடந்த தேர்தலில்பாகிஸ்தான் தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில் 193 உறுப்பினர்கள்கொண்ட ஐ.நா சபையில் 105வாக்குகளை மட்டுமே பாகிஸ்தான் பெற்றது. ஐக்கிய நாடுகள் சபை புதன் கிழமையன்று ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கான 18 உறுப்பினர்களை தேர்வு செய்தது. இந்த தேர்வு ரகசிய வாக்குப்பெட்டி மூலம் நடத்தப்பட்டது.

இந்த கவுன்சிலில் உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே 47உறுப்பினர்கள் கொண்ட மனித உரிமை கவுன்சிலில் மறு முறை தேர்வு பெறுவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்தது.ஆனால் அதன் முயற்சி பலன் அளிக்க வில்லை . இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்த பாகிஸ்தானிற்கு இந்த தோல்வி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகவுன்சிலின் புதிய உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று துவங்கி 3ஆண்டுகள் வரை நீடிக்கிறது. இந்த கவுன்சிலின் புதிய உறுப்பினர்களாக பெல்ஜியம், புரூண்டி,ஈக்வடார், எதியோப்பியா, ஜார்ஜியா, ஜெர்மனி, கென்யா, பனாமா, கிர்கிஸ்தான், மங்கோலியா, பிலிப்பைன்ஸ், கொரியகுடியரசு, டோகோ, ஸ்லோவேனியா, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட், மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெறுகின்றன.

ஆசியா-பசிபிக் பிரிவில் பாகிஸ்தான் தனது பதவியை இழக்கிறது. இதில் 5இடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவும் உறுப்பினராக இருக்கிறது. அதன் பதவிக்காலம் 2017ம்ஆண்டு முடிவடைகிறது. மனித உரிமைகவுன்சிலுக்கான உறுப்பினர்கள் தேர்வு ரகசிய வாக் கெடுப்பு பெட்டி மூலம் நடைபெற்றது. ஜெனிவாவை தலைமையிடமாக கொண்ட அரசு சாரா மனித உரிமை குழுவான ஐ.நா கண்காணிப்பு அமைப்பு பாகிஸ்தான் தோல்வி குறித்து தனது ஆச்சரியத்தை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தோல்வியையும் அது வரவேற்றுள்ளது. பாகிஸ்தான், வெனிசுலா, ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. எனவே அந்த நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்பில் இடம் பெறுவதை அந்த அமைப்புகள் எதிர்த்தன.

LEAVE A REPLY