ஐ.நா பிரேரணைக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு

இலங்கை குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் புதிதாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜெனீவா சென்றுள்ள புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகளே குறித்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அந்தவகையில் ஐ.நா ஆணையாளரின் அறிக்கையில் உள்ளதைப்போன்று மாற்று வழிமுறைகள் இலங்கை விவகாரத்தில் கையாளப்பட வேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இலங்கை பிரச்சினைக்கு சர்வதேச விசாரணை ஊடாகவே தீர்வை முன்வைக்க முடியுமெனவும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.