ஐ.நாவின் கோரிக்கைக்கு அமையவே 2 நாட்கள் முன்னதாக நாடாளுமன்றத்தை கூட்டியுள்ளாராம் ஜனாதிபதி!

President Mahinda Rajapakse delivered his speech in parliament, announcing the final defeat of the Tamil Tigers, even as the rebels insisted their leader was still alive, and vowed to fight on for a Tamil homeland.
ஐ.நா செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு மதிப்பளித்து இரண்டு நாட்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தைக் கூட்ட ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. தேவையான சந்தர்ப்பத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும்.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்த்தன 7 தடவைகளும், ஆர்.பிரேமதாச நான்கு தடவைகளும், சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐந்து தடவைகளும், மஹிந்த ராஜபக்ஷ ஐந்து தடவைகளும் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார்கள். பாராளுமன்றத்தை குறைந்த தடவைகள் ஒத்திவைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மட்டுமே எனவும் அமைச்சர் கூறினார்.