ஐ.தே.க.வைப் போன்று சிக்கலை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்ளமாட்டோம்- மஹிந்த

ஐக்கிய தேசியக்கட்சியைப் போன்று மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் மறைத்து எந்ததொரு உடன்படிக்கையையும் தமது அரசாங்கம் மேற்கொள்ளாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்ட விசேட அறிவித்தலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கை தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரு குழுக்களும் ஒரே நிலைப்பாட்டிலேயே காணப்பட்டது.

எது எவ்வாறாயினும் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பை விளைவிக்கும் எந்ததொரு உடன்படிக்கைகளிலும் நாம் ஒருபோதும் கைச்சாத்திடமாட்டோம்.

இதுதான் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினதும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தினதும் வித்தியாசமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.