ஐ.தே.க. வின் செயற்குழுவில் இருந்து மேலும் இருவர் நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து மேலும் இருவர் நீக்கப்பட்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகிர் மாகார் ஆகியோரே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் பி பெரேரா மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியதாக தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தற்போது இடம்பெற்றுவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இவர்கள் கலந்துகொள்ள முடியாது என அக்கட்சித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சியின் தலைமையகத்தில், கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.