ஐ.தே.க.யின் 70 ஆண்டு ஆவது நிறைவு விழா நாளை கொழும்பில்

ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 07 ஆம் திகதி காலை கொழும்பு கெம்பல் மைதானத்தில் நடைபெறவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இம்மகாநாடு நடைபெறவுள்ளது.

கட்சியின் 70 வருட நிறைவு நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் இரத்தினபுரியில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சீரற்ற காலநிலையினால் அந்நிகழ்வு நடைபெறவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY