ஐ.தே.க யின் தலைமைத்துவம் குறித்து கரு ஜயசூரிய எடுத்த தீர்மானம்

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்க தான் தயாராக உள்ளதாக என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைமைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய நிலையில் கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சியின் மேம்பாட்டிற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை பொறுப்பேற்க தன்னால் முடியும் என தற்போதைய கட்சித் தலைமைக்கு மற்றும் கடசியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.