ஐ.தே.க.தலைமை மாற வேண்டும் – பொன்சேகா

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை மாற வேண்டுமென்றே மக்கள் தற்போது எதிர்பார்க்கின்றனரென நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

களனியில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரச்சினையே தலைமைத்துவ பதவியாகும்.

மேலும் கட்சியிலுள்ள பெரும்பான்மையினர் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டுமென்ற கருத்தையே முன்வைத்து வருகின்றனர்.

அத்தகைய எண்ணத்தில்தான் நாமும் இருக்கின்றோம். அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தல், மக்களின் எதிர்பார்ப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவதானிக்கும்போது கட்டாயம் கட்சி தலைமையில் மாற்றம் அவசியம் என்பது உறுதியாகின்றது.

மேலும் சஜித்துக்கு குறித்த தலைமை பதவியை வழங்குவது தொடர்பான யோசனையும் முன்வைக்கப்பட்டு இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.