ஐ தே கட்சியின் தலைவர் யார்?

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியை ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கையளிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என இராஜாங்க அமைச்சர் சேஹான் சேமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.