ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவினர் – வடக்கு ஆளுநர் சந்திப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பின்போது வடக்கு மாகாண மக்களின் தேவைகள் குறித்தும் வடக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளனர்.