ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள்- முழு விபரம்

ஐந்து மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் சற்று முன்னர் அவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது.

புதிய ஆளுநர்களின் விபரம் வருமாறு:

மேல் மாகாணம் – அசாத் சாலி

மத்திய மாகாணம் – மைத்திரி குணரத்ன

கிழக்கு மாகாணம் – எம்.எல்.எம்.ஹிபுல்லாஹ்

வடமேற்கு மாகாணம் – சரத் ஏக்கநாயக்க

வட மத்திய மாகாணம் – பேஷல ஜயரத்ன

ஜனாதிபதி தலைமையில் புதிய ஆளுநர்கள்!- நிகழ்வு ஆரம்பம் (2ஆம் இணைப்பு)

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.

புதிய ஆளுநர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.

வடக்கு ஆளுநராக மார்ஷல் பெரேரா?

அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நியமிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவித்தலுக்கமைய அனைத்து மாகாண ஆளுநர்களும் தங்களது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ள நிலையில் இன்று புதிய நியமனங்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கமைய தென் மாகாண ஆளுநராக கடமையாற்றிய மார்ஷல் பெரேரா, வட. மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் கிழக்கு மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கையில் ஜனாதிபதி ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.