ஐதேக தலைமைத்துவம் தொடர்பான இறுதி தீர்மானம் இன்று?

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று (25) இடம்பெறவுள்ளது.

இன்று பிற்பகல் கட்சியின் தலைமையாகமான சிறிகொத்தவில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சி தலைமைத்துவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுளள்ள ஆலோசனைகள் தொடர்பில் இதன்போது நீண்டநேரம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமனம் தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.