ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சஜித் அழைப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அதற்கமைய கொழும்பு கண்காட்சி மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல் 1 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் மாகாண சபை உறுப்பினர்கள், வேட்பாளர்கள், தொகுதி அமைப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களை சஜித் பிரேமதாச இதன்போது சந்திக்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

அத்துடன், எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்குவது தொடர்பாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் தனது கருத்துக்களைத் தெரிவிக்கவுள்ளதுடன், ஏனையோரின் கருத்துக்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.