ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – மஹிந்த அணி

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக மஹிந்த அணி தெரிவித்துள்ளது.

தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பான பிரேரணை சபாநாயகரிடம் நேற்று முந்தினம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது, அரசியலமைப்பை மீறும் செயல் எனவும் அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணாண இந்த யோசனையை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க வேண்டாம் எனவும் அவர் இதன்போது சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் டலஸ் அழகப்பெரும இதன்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முப்பதிற்கும் அதிக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களை நியமிக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.