ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (10) நடைபெறவுள்ளது.

இந்த கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி தலைமையில் உருவாக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவுள்ளது.

இதேவேளை இன்றைய செயற்குழு கூட்டத்திற்கும் தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமக்கு அதிகாரம் வழங்கினால் அதற்கு தடை ஏற்படுத்த கூடாது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தலவத்துகொட பகுதியில் நேற்று (09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.