ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் படத்தில் ஓவியா?

அட்லீ இயக்கத்தில் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார். சுமார் 150 கோடி பட்ஜெட்டில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் விஜய் படத்தில் நடிக்க ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மகேஷ்பாபுவை வைத்து இயக்கும் ‘ஸ்பைடர்’ தெலுங்குப் படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் பிஸியாக இருக்கிறார். ‘மெர்சல்’ படத்தில் விஜய்யும் தற்போது பிஸியாக இயங்கி வருகிறார். இந்தப் படங்கள் முடிவடைந்ததும், இவர்கள் இருவரும் கூட்டணி அமைக்கவிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் பொருட்டு, தற்போது ‘டிரென்டிங்கில் இருக்கும் பிக் பாஸ் புகழ் ஓவியாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஓவியா நடிக்க இருக்கிறாரா? அல்லது இரண்டு மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்க இருக்கிறாரா? என்பது போன்ற அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகலாம்.

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா பற்றிய புகழ்பாடல் உச்சத்தில் இருந்தபோது, டுவிட்டரில் இப்படி ஒரு கருத்து பகிரப்பட்டது. “யார் கண்டது? நாளைய நயன்தாரா, ஓவியாவாகவும் இருக்கலாம்” ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படத்தில் ஓவியா கதாநாயகியானால், இந்த கருத்து உண்மையாகி விட வாய்ப்பிருப்பது போல் தோன்றுகிறது.

LEAVE A REPLY