ஏமனில் சுகாதார மையம் மீது ஏவுகணை தாக்குதல்: 3 பேர் பலி

3ae3b44a-c2de-489c-80aa-adba03978174_S_secvpf.gifஉள்நாட்டு போர் நடந்துவரும் ஏமனில் சுகாதார மையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் பலியானார்கள்.

இதுகுறித்து எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் “ஏமனின் ஷாதா மாகாணத்தில் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பினர் பணியாற்றிவரும் சுகாதார மையத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும், இந்த தாக்குதலை சவுதி கூட்டுப்படைகள் நடத்தினவா? அல்லது அரசுக்கு எதிரான கிளர்ச்சி படையினரால் நடத்தப்பட்டதா? என்பது தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY